Vijay & Trisha Outing photo: ஜோடியாக அவுட்டிங் சென்ற விஜய் - திரிஷா! திரையுலகில் புகைச்சலை ஏற்படுத்திய போட்டோ!

First Published Jun 23, 2024, 2:05 PM IST

தளபதி விஜய்யுடன் அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு... தளபதிக்கு தன்னுடைய 50-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் திரிஷா.
 

ஏற்கனவே விஜய் - த்ரிஷா இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும், விஜய் அவருடைய மனைவியை விட்டு விலகி வாழ்ந்து வருவதற்கு த்ரிஷா தான் காரணம் என பல வதந்திகள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் நடிகை த்ரிஷா தற்போது விஜய்யுடன் அவுட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ரீல் ஜோடிகளில் ஒன்று விஜய் - த்ரிஷா ஜோடி. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் படம் பார்ப்பவர்கள் உள்ளங்களையே கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.  இதன் காரணமாகவே விஜய் - திரிஷா இருவரும் கில்லி, ஆதி, குருவி, என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தனர்.

Indian 2 Trailer: இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது..! அசத்தலான போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு!
 

அதேபோல் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, லியோ படத்திலும்... பல வருடத்திற்கு பின்னர் த்ரிஷா - விஜய் ஜோடி ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திலும் இவர்கள் கெமிஸ்ட்ரி அதிகம் கவனிக்கப்பட்டது. அதே போல் இப்படத்தில் இருவரும் லிப் லாக் காட்சியிலும் நடித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
 

லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக விஜய் - திரிஷா உள்ளிட்ட பட குழுவினர் அனைவருமே, இரண்டு மாதம் அங்கேயே தங்கி படப்பிடிப்பை நடத்தினர். அப்போது விஜயுடன் த்ரிஷாவுடனே வெளியிடங்களில் சுற்றுவது போல், எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவ, இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது.

Devayani: 2 ஹீரோயின்ஸ் ரெடி! அம்மாவை மிஞ்சிய அழகில் தேவயானியின் மகள்கள்! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

vijay, sangeetha

அதே போல் விஜய் தளபதி விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விலகி இருப்பதற்கு காரணமும் த்ரிஷா தான் என சில சினிமா விமர்சகர்கள் அரசால் புரசலாக கூறினர். ஆனால் இப்போது வரை, விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்குறித்த தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. இருவருமே திருமண நிகழ்ச்சியில் கூட ஒன்றாக கலந்து கொள்வதை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தளபதியும் குடும்பத்தை விட சமீப காலமாக திரைப்படங்கள் நடிப்பதிலும், அரசியல் என்ட்ரியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை த்ரிஷா ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக... மாடர்ன் உடையில் தளபதியுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார். இந்த பதிவில் கேப்ஷனாக... 'புயலுக்கு அமைதி, புயல் அமைதிக்கு! இன்னும் பல மைல்கற்களுக்கு முன்னால்' என பதிவிட்டுள்ளார்.

Ajithkumar: அஜித்தின் அரசியல் ஆர்வம் பற்றி அவரிடமே கேட்ட ரமேஷ் கண்ணா! ஒற்றை வார்த்தையில் கூறிய நச் பதில்!
 

Latest Videos

click me!