ஒரு கட்டத்தில் வைகை புயல் வடிவேலுவுக்கு ரெக்கார்டு போடப்பட்ட நிலையில், சூரிக்கு லீடு காமெடி ரோலில் நடிக்கும் வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது. அந்த வகையில் சுந்தரபாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தில்லு முல்லு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நையாண்டி, நிமிர்த்திடில், பாண்டியநாடு, ரம்மி, ஜில்லா, மான் கராத்தே, போன்ற படங்கள் இவருடைய கேரியரை தூக்கி நிறுத்தியது. பின்னர் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.