Daniel Balaji Eye Donation: மண்ணை விட்டு மறைந்தாலும்... கண் மூலம் 2 பேருக்கு தானம் உதவிய டேனியல் பாலாஜி!

First Published Mar 30, 2024, 9:56 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் டேனியல் பாலாஜி, நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
 

உலக நாயகன் கமலஹாசன் இயக்கி, நடிக்க இருந்த 'மருதநாயகம்' படத்தின் படத்தில் புரோடக்ஷன் மேனேஜராக தன்னுடைய பணியை துவங்கியவர் டேனியல் பாலாஜி. இதைத்தொடர்ந்து சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான 'சித்தி' தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து அலைகள் தொடரில் நடித்த போது, அவருக்கு அந்த சீரியலின் இயக்குனர் சுந்தர் கே விஜயன் டேனியல் பாலாஜி என பெயர் வைத்தார். இதுவே அவரது பெயராகவும் மாறியது.
 

இதைத்தொடர்ந்து 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் மூலம், வெள்ளித்திரை நடிகராக அவதாரம் எடுத்த டேனியல் பாலாஜி, காதல் கொண்டேன், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், மறுமுகம், வை ராஜா வை, பைரவா, இப்படை வெல்லும், மாயவன், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 10திற்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

Daniel Balaji Photo: அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நடிகர் டானியல் பாலாஜியின் உடல்..! வெளியானது புகைப்படம்..!
 

தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ள டேனியல் பாலாஜி, மறைந்த பிரபல நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். அதாவது நடிகர் முரளியின் தாயாருடைய... உடன் பிறந்த தங்கையின் மகன் தான் இந்த டேனியல் பாலாஜி. 48 வயது ஆகும் டேனியல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள வரதம்மாள் காலனியில்... சிறுவயதில் இருந்தே... அவர் வசித்து வந்த இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

மேலும் டேனியல் பாலாஜியின் கண்கள் அவருடைய குடும்பத்தினரால் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் என்னதான் வில்லனாக நடித்தாலும், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் டேனியல் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உடல் இன்று மாலை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Daniel Balaji: டேனியல் பாலாஜி மரணத்திற்கு இதுதான் காரணமா? இவருக்கும் நடிகர் முரளிக்கும் என்ன தொடர்பு?

click me!