திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி

Published : Dec 26, 2025, 02:28 PM IST

பெங்களூருவில் திருமணமான ஒரு மாதத்தில், கணவனின் நடத்தையில் சந்தேகம் மற்றும் கொடுமை தாங்காமல் புதுப்பெண் ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் சமாதானம் செய்தும் பலனில்லாததால், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 

PREV
15
பெங்களூரு தம்பதி

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா (27). இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லசந்திராவில் வசித்து வந்தார்.

25
நடத்தையில் சந்தேகம்

இந்நிலையில் இருவரது வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் சந்தேகம் என்ற கொடூரன் புகுந்தான். அதாவது லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

35
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் மல்லசந்திராவுக்கு வந்து லிகித் சிம்ஹாவிடம் அட்வைஸ் செய்து வைத்து இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பின்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.

45
புதுப்பெண் ஐஸ்வர்யா தற்கொலை

இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன ஐஸ்வர்யா கணவர் வெளியில் சென்றதும் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டு அழுது கதறினார். இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு தெரிவித்ததை அடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

55
கணவர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனது மகள் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories