சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு

Published : Dec 26, 2025, 11:04 AM IST

ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
14
பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் அப்போது தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
குற்றவாளியை கைது செய்த போலீஸ்

இந்த சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகள் அமைத்து திருவள்ளூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 13 நாட்களுக்கு பிறகு அதாவது ஜூலை 25ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (35) என்பது தெரியவந்தது. இதனிடையே கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி குற்றவாளியை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

34
போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு

இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு கடந்த 5 மாதங்களாக திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 22 முறை அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், குற்றவாளி பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்,1.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கிடவும் உத்தரவிட்டார். சாகும் வரை தண்டனையை அனுபவிக்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிஸ்வகர்மா புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 5 மாதத்திற்குள் நீதிமன்றம் விசாரணை முடித்து தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

44
நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் நாள் நான்காம் வகுப்பு பயிலும் 8 வயது மாணவி கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 2 லட்சம் தண்டமும் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more Photos on
click me!

Recommended Stories