Husband Murder Case: காசியாபாத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரைண்டர் மற்றும் மிக்ஸியைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (36). இவரது மனைவி ரூபி (28). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 12 வயது மகன், 10 வயது மகள் உள்ளனர். இந்நிலையில் ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் கணவர் ராகுலுக்கு தெரியவந்தது.
24
கணவன் - மனைவி இடையே தகராறு
இதனையடுத்து மனைவி ரூபியை ராகுல் தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் தான் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு கணவர் சென்றுள்ளார். உடனே ரூபி போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். திடீரென வீட்டிற்குள் நுழைந்த ராகுல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து நேரில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவியை கண்டித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனாலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை போட்டுத்தள்ள திட்டமிட்டனர்.
34
கணவரின் உடல் பாகங்களை கிரைண்டர் போட்ட மனைவி
அதன்படி ரூபி தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் ராகுலை கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காகவும், உடல் பாகங்களை எளிதாக அப்புறப்படுத்துவதற்காகவும் கணவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் உடலின் சில பாகங்களை கிரைண்டர், மிக்ஸியைப் பயன்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் அந்த உடல் பாகங்களைச் சிறு சிறு பொட்டலங்களாகக் பாலித்தீன் பைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசியுள்ளனர்.
ராகுல் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூபியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது ரூபி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காதலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இறந்தவரை அடையாளம் காண முடியாமல் தவித்த காவல்துறையினர், இறுதியாக ராகுல் என டாட்டூ குத்தப்பட்ட கையை கண்டுபிடித்தனர். மேலும் மகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளியை ஈஸியாக கண்டுபிடிக்க உதவியது.