இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Published : Dec 23, 2025, 10:36 AM IST

கோவையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்கியிருந்த போலீஸ்காரர், அங்கு குளித்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் உறவினர் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரின் செல்போனை பறிமுதல் செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

PREV
14
அதிகரிக்கும் பெண்கள் மீதான குற்றம்

தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள், பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவ்வப்போது சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் போலீஸ்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டர் வீட்டில் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த அதிர்ச்சி

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு சொந்தமான வீடு, மதுக்கரை பிருந்தாவன் நகரில் உள்ளது. அங்கு அவரது மகள் மற்றும் உறவினர் மகள் ஆகிய இருவரும் தங்கி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணனுக்கு தனி அறையை கொடுத்து இன்ஸ்பெக்டர் தங்க வைத்துள்ளார்.

34
பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ

அங்கு தங்கிய அந்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரின் உறவுக்கார பெண் குளியல் அறைக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது இதை ரகசியமாக மறைந்திருந்து போலீஸ்காரர் வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து ரசித்து கொண்டிருந்தார். அவர் வீடியோ எடுத்ததை எதார்த்தமாக வெளியே வந்த இன்ஸ்பெக்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

44
போலீஸ்காரர் கைது

இதனையடுத்து போலீஸ்காரர் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார். பின்னர் இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீஸ்காரர் மாதவ கண்ணனை கைது செய்த மதுக்கரை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories