கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்

Published : Dec 22, 2025, 02:23 PM IST

Chennai Crime: சென்னையில் பயிற்சிக்கு சென்ற பிசியோதெரபி மாணவிக்கு, மேற்பார்வை மருத்துவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில் மருத்துவர் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
14

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு இந்த மாணவி சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்துள்ளார்.

24

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் மருத்துவர் கார்த்திக் செல்போனில் மாணவியை தொடர்புகொண்டு அழைத்துள்ளார். இதனையடுத்து மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் இரண்டு வீடுகளுக்கு சென்று பிசியோதெரபி செய்த நிலையில் ஒரு பெண்ணிற்கு பிசியோதெரபிஸ்ட் செய்ய வேண்டும் என கூறி அம்மாணவியை அவரது காரில் ஏற்றி சென்றிருகிறார். அப்போது காரில் இருந்த குளிர்பானத்தை எடுத்து கார்த்திக் மாணவிக்கு குடிக்க கொடுத்துள்ளார்.

34

கொடுத்த சிறிது நேரத்திலேயே மாணவி மயக்கம் அடைந்துள்ளார். இதன்பின்னர் மாணவியை கொளத்தூர் ஜெயந்தி நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவர் கார்த்திகேயன் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி கண் விழித்து பார்த்தபோது ஆடைகள் அனைத்தும் களைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அழுது கதறினார். ஆனால் அப்போது மருத்துவர் அங்கு இல்லை.

44

இதையடுத்து உடைகளை சரி செய்து கொண்டு வெளியே வந்த மாணவி தனது அக்காவிற்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் இளம் பெண்ணின் உறவினர்கள் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மனைவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. போலீசாரிடம் டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில் ஒரு வேகத்தில் மாணவியிடம் அப்படி நடந்துகொண்டதாக கண் கலங்கினார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories