வீட்டை விட்டு ஓடிய மோனு, இரவு நேரத்தில் கங்கை நதி அருகே சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹரித்வாரில் இருந்து அங்குள்ள ஒருவரின் செல்போன் மூலம் மோனு தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து மீரட் போலீசார் அங்கு சென்று ஹரித்வார் ரயில்நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த மோனுவை மீட்டு கொண்டு வந்தனர். முதலிரவுக்கு பயந்து புதுமாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.