ஆம்னி பஸ்சில் வைத்து கல்லூரி மாணவி! வீடியோ காட்டி ஓயாமல்! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டான் தாயிடம் கதறல்!

Published : Dec 02, 2025, 12:00 PM IST

College Student Rape: கோவையில் படிக்கும் மாணவி ஒருவரிடம், உதவி செய்வது போல் நடித்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் நட்பாகியுள்ளார். பின்னர், பேருந்தில் பயணம் செய்த மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டல்.

PREV
15
ஆம்னி பேருந்து

குமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வரும் விவசாயி. இவரது 22 வயது மகள், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக தனது தாயுடன் ஆம்னி பேருந்து ஒன்றில் கோவைக்கு சென்றுள்ளார். அந்த பேருந்தை களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனீஷ் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த தாய் மற்றும் மகளிடம் அனீஷ் உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று அன்பாக பேசி வந்துள்ளார்.

25
நல்லவன் போல் நடித்த ஆம்னி ஓட்டுநர்

அதுமட்டுமல்லாமல் மாணவியின் தாயிடம், மாணவி என் மகளை போன்றவர். கல்லூரிக்கு செல்ல நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டாம். நானே உதவுகிறேன் என்று மிகவும் அக்கரையாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய மாணவி கோவையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் அனீஷ் ஓட்டுநராக வந்த ஆம்னி பேருந்திலேயே பயணித்து வந்துள்ளார்.

35
கல்லூரி மாணவி பலாத்காரம்

இந்நிலையில் கடந்த 9ம் தேதி அனீஷ் ஒட்டிய பேருந்தில் வீட்டிற்கு வரும் போது ஸ்லீப்பர் பெட்டில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநர் அனீஷ் மாணவியை தட்டி எழுப்பி பசித்தால் பிஸ்கெட் சாப்பிடுமாறு கொடுத்துள்ளார். பிஸ்கெட்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கல்லூரி மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் மறுநாள் காலையில் ஊருக்கு பேருந்து வந்து சேர்ந்ததும் நாம் இருவருக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என்று மாணவியிடம் ஓட்டுநர் அனீஷ் கூறியுள்ளார். அப்போது தான் பாலியல் பலாத்காரம் செய்ததை உணர்ந்த மாணவி அழுது கதறினார். இதுதொடர்பாக தாயிடம் சொல்லப்போவதாக கூறியிருக்கிறார்.

45
வீடியோ காட்டி மிரட்டல்

அப்போது கத்தியை காட்டி மிரட்டி வெளியில் சொன்னால் உன்னையும், குடும்பத்தில் உள்ளவர்களையும் கொன்று விடுவேன். பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்து இருக்கிறேன் அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி இது தொடர்பாக யாரிடமும் கூறவில்லை. அதனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர் அனீஷ், தனியாக பேச வேண்டும் என்று அழைத்து மாணவியை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததையும் வீடியோ எடுத்துள்ளார். நாளுக்கு நாள் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். 

55
ஆம்னி பேருந்து ஓட்டுநர் அனீஷ் கைது

அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் அனீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories