இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் யார் என்பதும், சுதந்திரகுமார் செல்போனில் யாரிடம் கடைசியாக பேசியுள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அஜித்குமார் உள்பட இருவரிடமும் பேசியது தெரியவந்தது.