சிதம்பரம் அருகே, பாலியல் சீண்டல் புகார் அளித்த தனது அண்ணி தமிழரசியை, கொழுந்தனான பாலகிருஷ்ணன் அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். முன் ஜாமீனில் வெளியே வந்த பாலகிருஷ்ணன், தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலையை செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி (35). இந்த தம்பதிக்கு ஹரிகிருஷ்ணன் (13), ஹரிசக்தி (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
25
அண்ணிக்கு பாலியல் சீண்டல்
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் சென்னைக்கு சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழரசி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக அதே கிராமத்தில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவர் கோபாலகிருஷ்ணனின் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும் தனதுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் தமிழரசி பரபரப்பு புகார் அளித்தார்.
35
கொழுந்தன் கைது
இந்த புகாரை அடுத்து 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் கைது செய்யப்பட்டார். ஆனால் பாலகிருஷ்ணன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன் முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்துக்கு முன் வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று மாலை 3 மணியளவில் ஃபுல் மப்பில் வீட்டிற்கு சென்று தமிழரசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றவே ஆத்திரத்தில் பாலகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தமிழரசி கழுத்தை அறுத்துள்ளார். ஆத்திரம் தீராததால் தலையை தனியாக துண்டித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழரசி உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலை ஆகியவற்றை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
55
போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணன் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அண்ணியின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.