கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த தனது மனைவியை கணவர் பாலமுருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்தவர் பாலமுருகன்(34). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (30) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.
25
கள்ளக்காதல் விவகாரம்
இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான நெல்லையை சேர்ந்த இசக்கிராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா தனது குழந்தைகளுடன் கோவைக்கு வந்தார். பின்னர் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு காந்திபுரத்தில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார்.
35
ஸ்ரீபிரியா அரிவாளால் வெட்டி படுகொலை
நேற்று காலை 9 மணி அளவில் பாலமுருகன், நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தார். ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று மனைவியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் பாலமுருகன் அவரது சடலத்தின் முன் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் செல்பி எடுத்தார். அந்த போட்டோவை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விரைந்து ஸ்ரீபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
55
போலீசில் அளித்த வாக்குமூலம்
அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் மனைவியிடம் பலமுறை எச்சரித்தும் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பி இருந்தார். இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் கோவைக்கு சென்று சேர்ந்து வாழலாம் என்று அழைத்த போது அவர் வர மறுத்துள்ளார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் இவ்வளவு கூறியும் ,மனைவி கேட்காததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்தில் வெட்டி கொன்றேன் என்றார்.