தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபர் கடந்த ஜனவரி 28ம் தேதி 10க்கும் மேற்பட்ட கும்பலால் வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்திவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார். இதனால், சக்திவேல் மீது கருப்புசாமி தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.