கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு (69). இவர் சைக்கிள் பழுது நீக்கும் கடையை நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் திமுக ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.