சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பிரியா (31) என்ற பெண்ணை கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். பிரியாவும் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பார்த்திபன் வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல புறப்பட்டது, அப்போது வந்த கும்பல் ஒன்று பார்த்திபனை வலுக்காட்டாயமாக காரில் கடத்தியது. மகன் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த காப்பாற்ற முயன்ற தாய் ஆஷா பிந்துவை இடித்து தள்ளிவிட்டு கார் நிற்காமல் சென்றது.
shivamogga crime
கார் மோதியதில் படுகாயமடைந்த ஆஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து சிக்னலை ஆய்வு செய்தபோது அது காஞ்சிபுரத்தில் அடைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
உடனே, தனிப்படை போலீஸார் காஞ்சிபுரம் சென்று அங்கு ஓரு வீட்டில் அடைத்து வைத்திருந்த பார்த்திபனை பத்திரமாக மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடத்தலில் ஈடுபட்டது பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா என்பது தெரிய வந்தது.
2 பேரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். சவுந்தர்யா, ராணிப்பேட்டையை சேர்ந்தவர். இருவரும் 7 வருடம் காதலித்து உள்ளனர். ஆனால், திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர். பேச்சுவார்த்தை மூலம் பிரிந்துவிட்டாலும் கூட, பார்த்திபன் நினைவாகவே இருந்துள்ளார். இதனால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதை தனது தாயாரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.
இந்நிலையில், காதலன் பார்த்திபனை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். இதற்கு சவுந்தர்யாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். கத்தி முனையில் பார்த்திபனை கடத்தி கோவிலில் வைத்து சவுந்தர்யாவுக்கு காட்டாய தாலி கட்ட வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காதலி சவுந்தர்யா மற்றும் அவரது தாய் உமா, தாய்மாமன் ரமேஷ், சித்தப்பா சிவகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆயுதங்களால் காயம் விளைவித்தல், கடத்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.