இந்நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சவுந்திரவள்ளி தனது மகள்களை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். அங்கு தனியாக சரவணன் மட்டும் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்த சரவணனிடம் பேச்சுக்கொடுத்து அவரை மதுகுடிக்க வைத்துள்ளார். அப்போது சரவணன், ராதாகிருஷ்ணனிடம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்வை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.