சென்னை கொளத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்(31). பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இதை அறிந்த அவரது அத்தை குணசுந்தரி தட்டிகேட்டத்துடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் கடனாக கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார். அதன்படி கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் கைது செய்யப்பட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பாரூக் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கணேஷ் அவரது அத்தை குணசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.