கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர்.
Illegal love and fire
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கும் விஷ்வா பண உதவியும் செய்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து அந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விஸ்வாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரால் மேலும் பல பெண்கள் ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.