என்ன குழந்தைகள் சிவப்பா இருக்கு! காதல் மனைவி மீது தீராத சந்தேகம்! சிகரெட்டால் சூடு!சித்ரவதை செய்து கொன்ற கணவர்

First Published | Aug 9, 2023, 11:21 AM IST

காதல் மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளும் சிகப்பாக பிறந்ததால் சந்தேகமடைந்த கணவர் சித்ரவதை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(32). இவர் அதே தெருவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

Mayiladuthurai

இந்நிலையில், அகிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தை சிகப்பாக பிறந்ததால் அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார். பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு அடுத்த குழந்தையும் சிகப்பாக பிறந்ததால் ஐயப்பனின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. இதனால், ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். பொறுமை இழந்த மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றார். பின்னர், அவரது பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tap to resize

Mayiladuthurai

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி அகிலாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி நெரித்து கொலை செய்துவிட்டு ஐயப்பன் அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக  ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனையம்,  ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

Latest Videos

click me!