இரண்டு திருமணத்தை மறைத்து 3வது திருமணம்.. 52 வயது பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய போலீஸ்.!

First Published | Aug 8, 2023, 8:06 AM IST

பாஜக பிரமுகர் மூர்த்தி என்பவர் 2வது திருமணத்தை மறைத்து 3வது திருமணம் செய்த புகாரில் கைது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூவர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). இவர், திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நளினி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், 2017ம் ஆண்டு தேவிகா (36) என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார். இதனை அறிந்த முதல் மனைவி நளினி மனவேதனையில் 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 

Tap to resize

இந்நிலையில் 2வது மனைவியான தேவிகாவை விட்டு விலக மூர்த்தி முடிவு செய்ததை அடுத்து பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த ஜென்சி என்பவரை கடந்த ஜூலை மாதம் 3வது திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த 2வது மனைவி தேவிகா ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகார் தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் மனைவி இறந்த நிலையில் 2வது திருமணத்தை மறைத்து 3வதாக திருமணம் செய்ததாக மூர்த்தி கைது செய்யப்பட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Latest Videos

click me!