இந்நிலையில், சிறுமியை பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஹீம் என்ற கமர்தீனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.