எனினும் ரேணு தேவியால் மால்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போது தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் சுமர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டனர். சுமர்சிங்கை கொலை செய்வதற்காக ஜித்தேர்ந்திர குப்தாவுக்கு ரூ.60,000 பேசப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.8,000 கொடுத்த ரேணுதேவி கொலைக்கு பின்னர் மீதமுள்ள தொகையை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜித்தேந்தர் குப்தா தனது கூட்டளிகளுடன் சேர்ந்து சுமர்சிங்கை கொடூரமான முறையில் துடிக்க துடிக்க கொலை செய்து பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரேணு தேவி, மால்தி தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.