இதையடுத்து ராஜேஸ்வரி வீட்டிற்கு அருகில் உள்ள தளவாய்அள்ளி பகுதியில், கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அனுமந்தன் ராஜேஸ்வரியை கீழே தள்ளி தலை மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்து குழியில் தள்ளி டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டியுள்ளார். இதனிடையே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்துள்ளனர்.