கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள விதுரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. அமைதியான சூழ்நிலை, பசுமையான மலைகள் குளு குளு காற்று நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் தங்குதற்காக அதிகளவில் லாட்ஜ்கள், காட்டேஜ்கள் உள்ளன. இங்குள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.