இதையடுத்து அங்கிருந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இரண்டு பேரும் ஸ்பா டெக்னீசியன் என்ற பெயரில் விப**ச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எபின் பிரிட்டோ (33), தஹில் (20) மற்றும் லாட்ஜ் மேலாளர் விஜிஜன் மிதுன்பாபு (31), லாட்ஜ் ஊழியர் அருள் மோகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.