ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி

Published : Dec 12, 2025, 02:35 PM IST

கும்பகோணத்தில் ரவுடி ஒருவரின் மனைவிக்கு 'ஐ லவ் யூ' என வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய கொரியர் டெலிவரி ஊழியர் அந்த ரவுடி மற்றும் அவரது நண்பர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

PREV
15
கொரியர் டெலிவரி ஊழியர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருமண்டங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி (31). தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் புகழேந்தி கொரியர் டெலிவரி செய்வதற்காக கும்பகோணம் மருதாநல்லூர் பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது கரிக்குளம் தெருவை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான சிபி சக்கரவர்த்தியின் (33) மனைவியிடம் புகழேந்தி கொரியர் டெலிவரி செய்துள்ளார்.

25
வாட்ஸ்அப்-பில் மெசேஜ்

அப்போது அவரது அழகில் மயங்கியது மட்டுமல்லாமல் அவரது செல்போன் நம்பவரை சேவ் செய்து வைத்து கொண்டு வாட்ஸ்அப்-பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், `நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், ஐ லவ் யூ' என்று அனுப்பியுள்ளார். இதை தனது கணவர் சிபி சக்கரவர்த்தியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு ரவுடி சிபி சக்கரவர்த்தி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

35
கொரியர் டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்

இந்நிலையில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி புகழேந்தி மீண்டும் கொரியர் டெலிவரி செய்வதற்காக மருதாநல்லூர் பகுதிக்கு வந்துள்ளார். இதையறிந்த ரவுடி சிபி சக்கரவர்த்தி தனது நண்பர்களான விக்னேஷ் (26), கிருஷ்ணா (33), குபேரன் (27), ஹரிஹரசுதன் (26) ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் புகழேந்தியை வழிமறித்து என் மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாயா என்று கேட்டு சிபி சக்கரவர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினர். இதுகுறித்து வெளியே சொல்ல கூடாது என மிரட்டி அவரை அனுப்பியுள்ளனர். இதில் புகழேந்திக்கு காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

45
கொரியர் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

புகழேந்தியை பரிசோதனை செய்த மருத்துவர் இவர் விழவில்லை என்றும் யாரோ கொடூரமாக தாக்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உறவினர்கள் புகழேந்தியை விசாரித்த போது, நடந்த சம்வத்தை கூறியுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் புகழேந்தியின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

55
5 பேர் சிறையில் அடைப்பு

இச்சம்பவம் குறித்து உறவினர்கள் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவுடி சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories