4 மாதங்களாக வலியால் துடித்த 14 வயது சிறுவன்.! விடாத இரண்டு காமக்கொடூரன்கள்.! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Published : Jan 03, 2026, 10:56 AM IST

சென்னையில் 14 வயது சிறுவனுக்கு செல்போன் ஆசை காட்டி, இரண்டு இளைஞர்கள் கடந்த நான்கு மாதங்களாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சிறுவனின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட பெற்றோர் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. 

PREV
13
8ம் வகுப்பு பள்ளி மாணவன்

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அப்பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவனை நைசாக பேசி தங்களது வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் இருவரும் மாறி மாறி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக சிறுவனிடம் இதுபோல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

23
காவல் நிலையத்தில் புகார்

இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என்பதால் அந்த சிறுவனுக்கு அவ்வப்போது சிறுவனுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் கேம் விளையாட செல்போன் கொடுத்ததும் மட்டுமல்லாமல் செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வந்துள்ளார்.

மகனின் உடல்நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகனிடம் பெற்றோர் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

33
போக்சோவில் கைது

இதனையடுத்து மொய்தீன், ஜாபர் சாதிக் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 14 வயது சிறுவனுக்கு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு டார்ச்சர் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories