மூன்று குழந்தைகளை பெத்த பிறகும் கருணாகரனுக்கு வந்த சந்தேகம்.. கண்ணெதிரே துடிதுடித்த கலையரசி! காலையில் பக்கா நாடகம்!

Published : Jan 03, 2026, 09:54 AM IST

வேலூர் அருகே தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட தகராறில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளார். உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் கணவன் கருணாகரன் சிக்கினார்.

PREV
14

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43). டயர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கலையரசி (33). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் வருமானம் இல்லாமல் கருணாகரன் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போதும் குடித்துவிட்டு வந்தும் தகராறு செய்துள்ளார்.

24

இந்நிலையில் மனைவி கலையரசியின் நடத்தையில் கருணாகரனுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் கலையரசியிடம் என்னை விட்டு வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா என கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த கருணாகரன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த டிசம்பர் 30ம் தேதி இரவு கலையரசி சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

34

அப்போது கலையரசி மீது மின்சாரம் பாய்த்து கொலை செய்துவிட்டு பின்னர் காலை எதுவும் தெரியாதது போல அவரது தந்தைக்கு போன் செய்து உங்களுடைய மகள் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக கருணாகரன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சென்று பார்த்தபோது கலையரசி உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

44

அதில், மனைவியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் ஒயரால் மின்சாரத்தை பாய்ச்சி கொன்று விட்டு காலையில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்ததாக அவரது பெற்றோரிடம் நாடகமாடியதாக கருணாகரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கருணாகரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories