ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வெங்கடேஷ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் சுமதி கொலை செய்யப்பட்டு, உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியது அம்பலமானது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை அடுத்துள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (32). லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் கணவர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
25
பார்சலில் தாலி
இதனையடுத்து மனைவியை காணவில்லை என்று கணவர் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் ஒரு பார்சலை அங்குள்ள மளிகைக்கடையில் கொடுத்து சண்முகத்திடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பிரித்து பார்த்த சண்முகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் சுமதி அணிந்திருந்த தாலி இருந்துள்ளது. இதனை யார் கொடுத்தது என்று ஓட்டுநரிடம் சண்முகம் விசாரித்த போது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
35
சாக்குமூட்டை சுமதியின் உடல்
அவரிடம் விசாரித்த போது உன் மனைவி சுமதி இந்த தாலியை கழற்றி கொடுத்துவிட்டு உன்னோடு வாழ முடியாது எனக்கூறி எங்கையோ சென்றுவிட்டார். யாருடன் சென்றார்? எனக்கு தெரியாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடேசை பிடித்து போலீசார் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. சுமதிக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்தததாகவும் கடந்த 23ம் தேதி கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி பள்ளத்தில் வீசியதாக கூறினார். இதனையடுத்து சுமதியின் உடலை ஒருவழியாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் குறித்து போலீசார் கூறுகையில்: மாரமங்கலத்தை சேர்ந்த சுமதி, இன்ஸ்டாகிராம் மூலம் வெங்கடேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரான சண்முகம் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த பகுதியில் உள்ள தனது காபி தோட்டத்திற்கு சுமதியை அடிக்கடி வரவழைத்து வெங்கடேஷ் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திடீரென வெங்கடேசின் போன் அழைப்பை சுமதி தவிர்த்துள்ளார். இதனால் உனக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார்.
55
கள்ளக்காதல்
ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தது, அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவத்தன்று சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தாலியை மட்டும் கழற்றி எடுத்துவிட்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் போட்டு கட்டி, பைக்கில் ஏற்றி குப்பனூர் மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் சென்று முனியப்பன் கோயில் அருகே வளைவில் உள்ள பள்ளத்தில் இறங்கி, தூரமாக தூக்கி வீசியுள்ளார். பின்னர் தாலியை பார்சலில் அனுப்பி வைத்து, வேறு நபருடன் அவர் ஓடிவிட்டார் எனக்கூறினால் நம்பி விடுவார்கள் என நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.