17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

First Published | Apr 5, 2023, 3:38 PM IST

ஒருதலைக்காதலால் மாணவி ஒருவரின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன். இவருக்கு வயது 24 ஆகிறது. என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ், அஜய், சந்தோஷ் ஆகியோருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 7. 30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.அப்போது சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார்.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Tap to resize

இதை அந்த பகுதி மக்கள் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர்,போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வந்தனர்.

பிறகு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க குறிப்பிட்ட காரை மடக்கி பிடித்தனர். திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..இந்த இடத்துக்கு போனா 2 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்.!!

Latest Videos

click me!