ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. கதறியும் விடாமல் ஓடும் காரில் விடிய விடிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

Published : Apr 01, 2023, 02:15 PM IST

பெங்களூருவில் 19 வயது இளம்பெண் காரில் கடத்தி விடிய விடிய கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PREV
14
 ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. கதறியும் விடாமல் ஓடும் காரில் விடிய விடிய இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோரமங்களா என்ற இடத்தில் தேசிய விளையாட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில்,  அந்த பூங்காவில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் ஆண் நண்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் இரவில் தனியாக பேசுவதை கண்டித்துள்ளார். 

24

இதனால் அங்கிருந்து இருவரும் வெளியேறினார். உடனே அவர்களை கண்டித்த அந்த நபர் தனது மூன்று நண்பர்களை போனில் அழைத்தார். காரில் ரெடியாக இருந்த 4 பேரும் அவரது ஆண் நபரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்தினார். ஓடும் காரில் அப்பெண்ணை விடிய விடிய கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

34

பின்னர் அதிகாலையில் அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே இறக்கிவிட்டு, இது தொடர்பாக வேலையில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசில் புகார் அளித்தார். 

44

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories