மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உத்தரபிரதேச இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் வசித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை இரவு கைசர்பாக் சென்ற அவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் இளம்பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.