தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி(50). இவரது மனைவி செல்வி (45). இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள். இதில், மூத்த மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 2வது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். 3வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் தொழில் செய்து வரும் ராமன்(26) என்பவருக்கும், செல்விக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கணவர் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜாமணி, செல்வி மற்றும் மகளுடன் தூக்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது முனங்கல் சத்தம் கேட்டதை அடுத்து கணவர் ராஜாமணி கண்விழித்து பார்த்த போது ராமனுடன், மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ராஜமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராமனை அடிக்க பாய்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வி கொடுவாளை எடுத்து வந்து தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் ராஜாமணியின் தலை, கை, கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ராஜமணி ரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்த ராமன் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பித்தார். பின்னர், மனைவி குடும்ப தகராறு காரணமாக கணவனை வெட்டி விட்டதாக கூறி சரணடைந்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜாமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் குடும்ப சண்டை என்று கூறிய நிலையில் பிறகு கள்ளக்காதல் விவகாரத்தால் இதுபோன்று செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமன் மற்றும் செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.