2வது திருமணம்.. குறுக்கே வந்த கள்ளக்காதலன்.. உல்லாசமாக இருந்த மனைவி - எதிர்பாராத ட்விஸ்ட்

First Published | Mar 28, 2023, 1:08 PM IST

முதல் கணவர் இறந்துடவிட, 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்த பெண் தகாத உறவு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.

இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார். மல்லிகா கணவர் இறந்த பிறகு முருகன் என்பவரை 2வதாக திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் வந்து மல்லிகாவுடன் உல்லாசமாக இருந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லிகாவை பார்க்க அவரது இளைய மகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மல்லிகா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையும் படிங்க..பாஜக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய அண்ணாமலை.. கமலாலயத்தில் புது உள்குத்து !!

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மல்லிகா வீட்டிற்கு ஜெயக்குமார் வந்து உள்ளார். அப்போது இருவரும் மது அருந்தி உள்ளனர். அதற்குப் பிறகுதான் மல்லிகா இறந்ததாக தெரியவந்தது.

அதனால் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறு மல்லிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது ஜெயக்குமாருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரத்தில் முருகன் கொலை செய்தாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

Latest Videos

click me!