கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தாலி கட்டிய கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

First Published | Mar 28, 2023, 9:01 AM IST

செங்கல்பட்டு அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் விவகாரத்தால் தமிழகத்தில் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்கூறிய விஷயமாக உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

Tap to resize

இந்நிலையில், நேற்று காலை திடீரென விவேக் வீட்டில் மூச்சு பேச்சு இல்லாமல் உயிரிழந்து கிடப்பதாக மனைவி அலறிய படி அழுது கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மனைவி நெஞ்சில் அடித்து கொண்டு சாமி என்ன வீட்டுட்டு போயிட்டையே என்று கதறினார். இதனிடையே, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெகதீஸ்வரியிடம் போலீசார் விசாரணை 
நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து ஜெகதீஸ்வரி மற்றும் ஏகாம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos

click me!