நைட்டு ஆனாலே ஃபுல் மப்புல வந்து ஒரே டார்ச்சர்.. வலியால் துடித்த மனைவி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

First Published | Mar 27, 2023, 12:34 PM IST

சென்னையில் குடிபோதையில் கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் பிரேம்குமார் (37). இவரது மனைவி கோமதி (35). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. குடிக்கு அடிமையான பிரேம் குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த 21ம் தேதி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரேம்குமார்  வழக்கம்போல் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து பொறுமை இழந்த மனைவி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பிரேம்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

Tap to resize

இதனால் ஆத்திரத்தில் இருந்த பிரேம் குமார் வீட்டிற்குச் சென்றதுமே மனைவியிடம் மீண்டும் சண்டை போட்டு அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் சுவற்றில் தலை மோதியதில் மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். இதில், தலையில் படுகாயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோமதியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார்.  இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். 

Latest Videos

click me!