73 வயது மூதாட்டி கொலை.. பாலியல் துன்புறுத்தலலுக்கு ஆளானாரா.? சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

First Published | Mar 25, 2023, 12:02 PM IST

சென்னை அருகே மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னை மணலி - அரியலூர் சாலை சந்திப்பில், சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். மூதாட்டி உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். பிறகு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

இறந்த மூதாட்டி மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்த வடிவாம்பாள். இவரது வயது 73. இவரது கணவர் ராஜமாணிக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.  இவருக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

rape

அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசிப்பதால், வடிவாம்பாள் மட்டும் தனியாக வசித்து வந்ததும் தெரிந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூதாட்டி ஆடைகள் கலையப்பட்டு கிடந்ததாகவும், நாக்கு கடித்த நிலையில்  இருப்பதால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

Latest Videos

click me!