உல்லாசத்துக்காக ஸ்கெட்ச் போட்டு புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி.. கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா?

First Published | Mar 25, 2023, 8:38 AM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அடுத்த அருகே வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(45). விவசாயி. இவருடைய மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில், சுப்பிரமணி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்  தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

Tap to resize

செல்விக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெயமுருகன்(45) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த  கணவர் சுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 16.04.2021 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சுப்பிரமணி ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலில் ஜெயமுருகன் வாங்கி கொடுத்த பூச்சிக் கொல்லி மருந்தை செல்வி கலந்து வைத்துள்ளார்.

விஷம் கலந்திருப்பதை அறியாத சுப்பிரமணி மதுவை குடித்து இறந்து போனது தெரியவந்தது. இதனையடுத்து, செல்வி, ஜெயமுருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இறுதி விசாரணைகள்  நிறைவு பெற்ற நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி செல்வி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஜெயமுருகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.31, 500 அபராதமும் விதித்து நீதிபதி  தீர்ப்பு வழங்கினார். 

Latest Videos

click me!