அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் சத்யா(வயது 26). இவரது கணவர் விஜயபாண்டியன்(30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 7 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் மிருதேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவர் விஜயபாண்டியனும், மாமியார் மனோரஞ்சிதமும் சத்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் கணவர் விஜயபாண்டியன், அவரது தாயார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை கடந்த 3 நாட்களாக தனிமையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.