திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா.? தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

Published : Mar 31, 2023, 02:06 PM IST

காதல் திருமணம் செய்த ஜோடி 3 மாதத்தில் நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
15
திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா.? தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் சரவணன். இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதே கம்பெனியில் பணிபுரிந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கொலையனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் கண்மணி  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

25

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று வீரப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சரவணனின் பெற்றோர் வீட்டில் தங்கினர்.

35

கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த கண்மணி, விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

45

பிறகு மேல்சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெரிவித்திருந்தார்.

55

அதன்பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் இறந்ததால் கடலூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories