புதுக்கோட்டையில் கொலை! துண்டு துண்டாக வெட்டி கோவளம் பீச்சில் உடல்.. விபச்சார பெண் கூறிய பகீர் வாக்குமூலம்..!

First Published | Apr 4, 2023, 3:21 PM IST

விமான நிலைய ஊழியரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை சூட்கேசில் வைத்து கோவளம் கடற்கரையில் புதைத்த சம்பவம் தொடர்பாக பாலியல் தொழில் செய்து வந்தத பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்ஜிஒ சாலையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி இருந்து கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலைய வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 18ம் தேதி வேலை முடித்துவிட்டு அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு ஜெயந்தன் சென்றார்.

ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் மாயமானார். இதனால், சந்தேகமடைந்த அவரது சகோதரி செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே அவரது அக்கா விழுப்புரத்தில் உள்ள தனது தந்தையை தொடர்பு கொண்டு கேட்டபோது ஜெயந்தன் ஊருக்கு வரவில்லை என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.


இதனால் பறிப்போன அவரது அக்கா பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தம்பியை காணவில்லை என்று புகார் அளித்தார். இதனையடுத்து,  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜெயந்தனின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி என்ற இடத்தில் சிக்னல் காட்டியது. இதையடுத்து கடந்த 1ம் தேதி தனிப்படை போலீசார் சென்றபோது, அங்கு பாலியல் தொழில் செய்யும் பாக்கியலட்சுமி (38) என்ற பெண் இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனையடுத்து போலீசார் விசாரிக்கும் பாணியில் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த பாக்கியலட்சுமியை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதலில் சந்தித்தார். பின்னர் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து ஜெயகாந்தன் கடந்த 2020ம் ஆண்டு கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். சிறிது நாட்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர். 

இதனையடுத்து பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க புதுக்கோட்டை வந்த போது என்னுடன் சேர்ந்து வாழ சொல்லி தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து  ஜெயந்தனை அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து 20 மற்றும் 26ம் தேதிகளில் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டேன் என்றார். 

இதற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் உடந்தையாக இருந்தனர் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை உடலை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை கடற்கரையில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!