Getti Melam Today Episode in Tamil : ஜீ5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கெட்டி மேளம். இந்த சீரியலானது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சீரியலில் கடந்த வாரம் அஞ்சலி வீட்டில் போருட்கள் மாற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
24
பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யும் லட்சுமி
சீக்ரெட் ரூம் சாவியை அஞ்சலி தேடி பிடித்து எடுத்து ஒருவரை வைத்து திறக்க முயற்சி செய்கிறார். அந்த நேரம் பார்த்து மகேஷ் வந்து இங்கு என்ன செய்கிறாய், இந்த ரூமை எதற்கு திறக்குறாய் என்றெல்லாம் கேட்க, அவரிடம் பதில் இல்லை. என்னுடைய சின்ன வயது பொருட்கள் இந்த ரூமில் இருக்கிறது என்று மகேஷ் சொல்லிவிட்டார். அதன் பிறகு அஞ்சலி மகேஷ் சொன்னதை யோசித்தபடியே இருந்தார். அந்த நேரம் பார்த்து மகேஷ் வீடு முழுவதும் ரகசிய கேமராக்களை மறைத்து வைக்கிறார்.
34
கெட்டி மேளம் சீரியல்
மகேஷ் இல்லாததை அறிந்து கொண்ட அஞ்சலி, அவரை தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் மகேஷ் மாட்டிக் கொள்வாரா இல்லையா என்ற பீதியும் எகிறுகிறது. இந்த நிலையில் சிவராமனுக்கு பென்ஷன் பணம் ரூ.30 லட்சம் கிடைக்கிறது. அதனை ரகுவரன் மற்றும் கேசவன் இருவரும் எல்லோருக்கும் அந்த ரூ.30 லட்சத்தை பிரித்து கொடுத்துவிடுங்கள் என்றனர்.
44
கெட்டி மேளம் இன்றைய எபிசோடு
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது உங்களுடைய அப்பாவின் கனவு. ஆதலால், அந்த பணத்தை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என்று லட்சுமி கூறுகிறார். இதைத் தொடர்ந்து வீடு கட்டுவதற்கான பூமி பூஜைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? பூமி பூஜை நடந்ததா? இல்லையா என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.