Published : Jul 14, 2025, 04:54 PM ISTUpdated : Jul 14, 2025, 05:47 PM IST
Karthigai Deepam 2 Swathi Arrested in Tamil : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டு பாட வந்த இடத்தில் சுவாதி போலீசாரால் கைது செய்யப்படும் நிலையில் கார்த்திக் அவரை காப்பாற்ற போராடுகிறார்.
ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இளம் ரசிகர்கள் மட்டுமின்றி இளம் காதல் ஜோடிகளின் மனதை கொள்ளை கொண்ட சீரியல் என்றே இந்த சீரியலை சொல்லலாம். அந்தளவிற்கு சீரியலில் காதல் காட்சிகள் ஒளிந்திருக்கிறது. என்னதான் பிடிக்காத திருமணமாக இருந்தாலும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கணவர் யார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு தெரியாமல் அவரை காதலித்து அவருக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்யும் காதல் மனைவியைப் பற்றியும் அவரது குடும்பத்தை சுற்றிலும் நடக்கும் கதை தான் இப்போது கார்த்திகை தீபம் 2 சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது.
26
கார்த்திகை தீபம் 2 சீரியல்
ஏற்கனவே ரோகினி கர்ப்பமாக இருக்கும் நிலையில், அடுத்ததாக துர்கா ரகசியம் திருமணம் செய்து கொண்டார். இப்போது சுவாதியை பாட வைக்கிறேன் என்ற பெயரில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் சீரியலின் நாயகன் கார்த்திக். வந்த இடத்தில் முதல் சுற்றில் தகுதி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 2ஆவது சுற்று போட்டி நடப்பதற்குள்ளாக தோழியை பார்க்க போகிறேன் என்ற பெயரில் ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ள இருந்தார். அவரை கார்த்திக் தான் பாதுகாப்பாக மீட்டு வந்தார்.
36
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சுவாதி 2ஆவது சுற்று போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக்கிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்திடலாம் என்று ரேவதி சென்றார். அப்போது அவர் திரும்பி நின்று தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது கார்த்திக் போன் வரவும் அங்கிருந்து தள்ளி சென்றது ரேவதிக்கு பின்னர் தான் தெரியவந்தது.
46
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இதனால், இந்த முறையும் ரேவதி காதலை சொல்லாமல் ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் தான் அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் சுவாதி கொஞ்சி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ரூம் பாய் ஒருவர் வந்து குழந்தையின் நகையை சுவாதிக்கு தெரியாமல் திருடிச் சென்று அவரது ஹேண்ட்பேக்கில் வைத்து விடுகிறார். இதைத் தொடர்ந்து போலீசில் புகாரளிக்க, அவர்களும் வந்த வேகத்தில் சுவாதியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
56
கார்த்திக் காஃபி வாங்க சென்றார்
அப்போது ரேவதி தனக்கு காஃபி வேண்டும் என்று கேட்கவே கார்த்திக் காஃபி வாங்க சென்றார். அவர் காஃபி வாங்கி வருவதற்குள்ளாக போலீஸ் அதிகாரிகள் சுவாதியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் 2ஆவது சுற்றுக்கான போட்டி தொடங்கியது. போட்டியாளர்களும் பாடல் பாட தொடங்கினர். காஃபி வாங்கிக் கொண்ட கார்த்திக்கிற்கு விஷயம் தெரியவர போலீஸ் மாதிரி தனது இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணுகிறார்.
66
சுவாதி பாடல் பாடினாரா?
அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை செய்கிறார். அதில், ரூம் பாய் தான் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அதன் பிறகு கார்த்திக் என்ன செய்கிறார் சுவாதி பாடல் பாடினாரா அல்லது சிறையில் இருந்தாரா என்பது குறித்து இன்றைய எபிசோடில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.