கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில், ட்ரைவர் தான் இந்த திருமணத்தை தடுக்க முயற்சி செய்கிறார் என, ரேவதியிடம் நல்லவள் போல் மாயா சொன்ன நிலையில், மற்றொருபுறம் சாமுண்டீஸ்வரி ராஜராஜனிடம் ட்ரைவர் தான் மாப்பிள்ளை என சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
கவலையில் சாமுண்டீஸ்வரி பாட்டி
மற்றொரு புறம் பேரனை மாப்பிள்ளையாக்க வேண்டும் என, பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியிடம் பேசிய நிலையில், அதை அவர் ஏற்று கொள்ளாத தகவலை, ராஜராஜனிடம் சொல்லி வருத்தப்படுகிறார். சாமுண்டீஸ்வரி எடுத்துள்ள முடிவு குறித்து, ராஜராஜன் சொல்வதற்கு முன், மகேஷ் காணவில்லை என மாயா மேடைக்கு ஓடி வந்து சொல்கிறார்.
கார்த்திக் மீது பழி போடும் ரேவதி
பின்னர் ஆரம்பத்தில் இருந்தே கார்த்திக்கிற்கு இந்த திருமணம் நடப்பதில் உடன்பாடு இல்லை என்பதை அறிந்த ரேவதி, மகேஷ் காணாமல் போக ட்ரைவர் ராஜா தான் காரணம் என சொல்ல அங்கிருக்கும் அனைவருமே அதிர்ச்சியில் உறைகிறார்கள். மேலும் மகேஷ் காணாமல் போனதால், திட்டம் சொதப்பி விட்டதே என சந்திரகலா, மற்றும் சிவனாண்டி இருவரும் அப்செட் ஆகிறார்கள்.
Karthigai Deepam: சுக்குநூறாக உடைந்த கார்த்திக்கின் திட்டம்; கோபத்தில் ரேவதி! கார்த்திகை தீபம் அப்டேட்!
ரேவதி, ட்ரைவர் மீது பழி சொல்வதை சற்றும் எதிர்பார்க்காத சாமுண்டீஸ்வரி, ட்ரைவர் மகேஷை கடத்தி செல்ல வாய்ப்பே இல்லை. இதுக்கு காரணம் வேறொருத்தர் என சிவனாண்டியை கை காட்டுகிறார். அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க... அவன் எனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறான்.
மகேஷை கடத்த சொன்ன சாமுண்டீஸ்வரி
மாப்பிள்ளையாக மணமேடையில் இருக்க வேண்டிய மகேஷ், ரவுடிகளால் கடத்தப்பட்டு குடோனில் அடைத்து வைக்க பட்ட நிலையில், சாமுண்டீஸ்வரிக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசும் ரவுடி ஒருவன்... நீங்கள் சொன்ன மாதிரியே நான் அவனை கடத்தி விட்டேன் என கூறுகிறான். இதன் மூலம் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்ற சொல்லிவிட்டு, அப்படியே பிளேட்டை மாற்றி போட்டது சாமுண்டீஸ்வரி என்பது தெரிகிறது.
மாயா மகேஷை கண்டுபிடிக்க, போலீசில் புகார் கொடுக்கலாம் என கூறும் நிலையில்... என்ன நடக்க போகிறது. எப்படி கார்த்திக் மாப்பிள்ளையாக மாற போகிறார். ரேவதி இந்த திருமணத்திற்கு சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.