பிரபல இயக்குனரின் மகளோடு முதன்முறையாக ஜோடி சேரும் கார்த்தி!

Published : Mar 24, 2025, 01:17 PM IST

நடிகர் கார்த்தியின் 29வது படத்தை தமிழ் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
பிரபல இயக்குனரின் மகளோடு முதன்முறையாக ஜோடி சேரும் கார்த்தி!

Sivakarthikeyan Movie Actress to Pair with Karthi in His 29th Film! தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் அடுத்ததாக டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அப்படம் கார்த்தியின் 29வது படமாகும். கடலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும்.

24
Kalyani Priyadarshan

அதேபோல் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்கிற அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தான் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்புவுடன் மாநாடு போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ரவி மோகன் ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து முடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் விரைவில் கார்த்தியுடன் ஜோடி சேர உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Karthi : விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி - என்ன ஆச்சு? படப்பிடிப்பை ரத்து செய்த படக்குழு!

34
Karthi 29 Heroine Kalyani Priyadarshan

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி. இப்படம் மூலம் கார்த்தி உடன் முதன்முறையாக ஜோடி சேர உள்ளார் கல்யாணி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2 பட பணிகளில் பிசியாக உள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் தமிழ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி.

44
Karthi upcoming Movies

அதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி கைவசம் வா வாத்தியார் என்கிற திரைப்படமும் உள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதுதவிர கைதி 2, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கார்த்தியின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல; அதற்குள் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற கார்த்தியின் ‘சர்தார் 2’

Read more Photos on
click me!

Recommended Stories