சன் டிவி, விஜய் டிவி சீரியல்களுக்கு போட்டியாக வந்த ஜீ தமிழ் தொடர் - இந்த வார டாப் 10 டிஆர்பி லிஸ்ட் இதோ

First Published Sep 12, 2024, 3:17 PM IST

Top 10 Tamil Serial TRP : டாப் 10ல் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களில் கடந்த சில வாரமாக ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த வாரம் ஜீ தமிழ் சீரியலும் அதில் முன்னேறியது.

serial TRP

சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால், மக்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்களின் முன்னணி நிலவரம் அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 36-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜீ தமிழ் சீரியலும் இடம்பிடித்து உள்ளது.

Tamil serial TRP

டாப் 10 டிஆர்பி பட்டியலில் கடந்த வாரம் 10-வது இடத்தில் ராமாயணம் சீரியல் இருந்த நிலையில் அதை ஜீ தமிழ் சீரியலான கார்த்திகை தீபம் பின்னுக்கு தள்ளி உள்ளது. கார்த்திகை தீபம் சீரியலுக்கு 6.06 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரமும் 6.62 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் சுந்தரி சீரியல் 7.00 புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!

Latest Videos


Top 10 Tamil Serial

கடந்த வாரம் 6-ம் இடம்பிடித்த மல்லி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 7.02 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடம்பிடித்து உள்ளது. அதே போல் கடந்த வாரம் 7வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் அந்த சீரியலுக்கு 7.70 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 8.20 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

Top 10 Tamil Serial Rating

முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களில் 3 இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த மூன்று முடிச்சு சீரியல் 8.27 புள்ளிகளுடன் 4-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்ததாக மூன்றாவது இடம் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.61 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் இந்த சீரியல் நான்காம் இடத்தில் இருந்தது. முதல் இரண்டு இடங்களை சன் டிவியின் சிங்கப்பெண்ணே மற்றும் கயல் சீரியல் பிடித்துள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 8.98 புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 8.64 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... சிகிச்சைக்கு பணமில்லாததால் கண்முன்னே பறிபோன தந்தையின் உயிர்... கலங்க வைக்கும் வடிவேலுவின் மறுபக்கம்

click me!