குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக இருக்கும், 'அண்ணா' சீரியலில் இன்று ஷண்முகம் எப்படி குழந்தையை காப்பாற்ற போகிறார், அதன் மூலம் அவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலான 'அண்ணா' சீரியலின் இன்றைய எபிசோட் பற்றிய தகவல்களை பார்க்கலாம். குழந்தையை காப்பாற்றுவதற்கான மருந்துக்காக, அலைந்து திரியும் ஷண்முகம் எப்படியோ ஒரு கடையில் இருக்கும் 4 மருந்தையும் வாங்கி கொண்டு பரணியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்.
26
குழந்தை உயிரை காப்பாற்ற நினைக்கும் பரணி:
பரணி மற்றும் ஷண்முகம் குழந்தையின் உயிரை காப்பாற்ற நினைக்கும் நிலையில் இருவருக்கும் இடையே உள்ள பாலம் உடைந்து, ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கிறார்கள். ஷண்முகம் முருகா நீ தான் இந்த குழந்தை உயிரை காப்பாத்தணும் என வேண்டிக்கொள்ளும் நிலையில், சண்முகத்தின் கண்ணில் ஒரு ட்ரான் கேமரா தென்படுகிறது.
அந்த கேமராவை ஆபரேட் செய்பவனிடம் சென்று, 'தானே இதுல இருக்குற மருந்தை ட்ரோன் மூலம் அங்க கொண்டு போக முடியுமா? கொஞ்சம் உதவி செய்யுங்க, ஒரு குழந்தையோடு உயிரை காப்பாத்தணுமும். இந்த மறுத்து அந்த குழந்தையோட சிகிச்சைக்கு ரொம்ப முக்கியம் என சொல்ல அந்த ட்ரான் ஆப்ரேட்டரும் சம்மதம் சொல்கிறார்.
46
காரில் நடக்கும் குழந்தையின் ட்ரீட்மெண்ட்
உடனே ஷண்முகம் பரணிக்கு போன் செய்து, நீ ட்ரீட்மெண்ட்டை ஸ்டார்ட் பண்ணு, மருந்து உன்னை தேடி வரும் என்று கூறிய நிலையில், பரணியும் சண்முகத்தின் வார்த்தையை நம்பி சிகிச்சையை துவங்குகிறார். இன்னொரு புறம், குழந்தை காணவில்லை என தேடி கொண்டிருக்கும் முத்த பாண்டிக்கு, GPS மூலமாக தேடி சென்று காரை அடைகிறான். முத்துப்பாண்டியுடன் குழந்தையின் பெற்றோருடன் வருகிறார்கள். முத்துப்பாண்டி பரணியை பார்த்ததும் இது என் தங்கச்சி என சொல்கிறான்.
குழந்தைக்கு காரில் ட்ரீட்மென்ட் செய்யப்படுவதை பார்த்ததும், என் குழந்தைக்கு என்ன பிரச்சனைனு தெரியுமா முதல்ல உங்களுக்கு? நான் போகாத ஹாஸ்ப்பிட்டலே இல்ல? அங்கே எல்லாம் சரி செய்ய முடியாததையா நீங்க எந்த வசதியும் இல்லாமல் இந்த காரில் வெச்சு சரி செய்ய போறீங்க என்று ஆவேசப்படுகின்றனர்.
பரணி கொஞ்சம் பொறுத்துக்கோங்க... குழந்தையை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கு பேமிலி டாக்டருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, பின்னர் பரணி போனை வாங்கி தான் கொடுக்கும் ட்ரீட்மெண்ட் குறித்து சொல்கிறாள். டாக்டர், சபாஷ் இப்போதைக்கு இந்த ட்ரீட்மெண்ட் தான் சரியா இருக்கும். உங்க திறமைக்கு நீங்க அமெரிக்காவுல இருக்கனும் என்று பாராட்டுகிறார்.
66
ஷண்முகத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி
குடும்ப மருத்துவர் சொன்ன பின்னரே... பரணியை பற்றி அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நீங்க அமெரிக்காவிற்கு வாங்க, உங்க படிப்பு செலவு ஏத்துக்குறோம் அப்படினு அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் சொல்ல இதனால் சௌந்தரபாண்டி சந்தோஷ படுகிறார். அதே நேரம் ஷண்முகம் இதனால் அதிர்ச்சியில் உறைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? பரணியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.