துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி; பாட்டி விட்ட சவால்! அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Feb 12, 2025, 01:10 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில்... பாட்டி, பேரனுக்கு ரேவதியை பெண் கேட்டு வந்த நிலையில் இன்று எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கிறது. இது பற்றி பார்ப்போம்.  

PREV
16
துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி; பாட்டி விட்ட சவால்! அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துக்குமே, இல்லத்தரசிகள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம்,  பரமேஸ்வரி பாட்டி, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

26
உச்சகட்ட கோவத்தில் சாமுண்டீஸ்வரி

பல வருடங்கள் கழித்து சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரி பாட்டியை பார்த்ததும் நீங்க எதுக்கு வந்தீங்க...  என கோபம் தலைக்கேறி கத்துகிறார். சாமுண்டீஸ்வரி குணத்தை பற்றி நன்கு அறிந்த ராஜராஜன் ஏற்கனவே... நீ தனியாக வந்தால், அங்கு உன் பேச்சு எடுபடாது என கூறிய நிலையில், பரமேஸ்வரி பாட்டியும் ஊர்காரர்களுடன் வந்திருக்க அவர்கள், சாமுண்டீஸ்வரி பாட்டியை எடுத்தெறிந்து பேசுவதை பார்த்துவிட்டு, என்னமா... உனக்கு பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேச தெரியாதா என சத்தம் போடுகின்றனர். 
ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமா? சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் டாப் சீரியல் ஹீரோயின்ஸ்!

36
பிரிஞ்ச குடும்பம் ஒன்று சேர திருமணம் நடக்குமா?

பின்னர் பரமேஸ்வரி பாட்டி, "இத்தனை வருஷம் எங்க மேல தப்பு இருந்ததால தான் நாங்க தள்ளி இருந்தோம். ஆனால் இனிமே அப்படி இருக்க முடியாது. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா கூட என் புள்ள என்ன பார்க்க வருவானா? என்னோட இறுதி சடங்கை எல்லாம் செய்வானானு தெரியல.  என்று உருக்கமாக பேசுகிறார். 

இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும்னா... பிரிஞ்ச குடும்பம், மீண்டும்  ஒன்னு சேரனும். அதுக்கு தான் நான் என் பேரனுக்கு என் பேத்தியை கேட்டு வந்திருக்கேன் என்று விஷயத்தை பாட்டி பட்டுனு போட்டு உடைக்க, சாமுண்டேஸ்வரி உட்பட ஒட்டு மொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைகிறது. 

46
பாட்டி போட்ட சவால்

சாமுண்டீஸ்வரி, என் பொண்ணுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிடுச்சு என பாட்டியிடம் சொல்வதோடு, அதுவும் இல்லாமல் என் பொண்ணை எல்லாம் உங்க பேரனுக்கு கொடுக்க முடியாது-ன்னு கோவமாக சொல்கிறார். சாமுண்டீஸ்வரியிடம் இறங்கி போய் பேசும் பாட்டி,  இவ்வளவு நாள் எங்களுக்கு நீ தண்டனை கொடுத்தது போதும். என் பேர பசங்களுக்கும், அப்பா வழி சொந்த பந்தத்தை பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல. தயவு செஞ்சு அவங்களை தண்டிச்சிடாத என சொல்கிறார்.

ரூ.20 டிக்கெட் முதல்; வேட்டையன் வரை! பல ஹிட் படங்களை வெளியிட்ட உதயம் அஸ்தமனம் ஆனது!

56
பரிதவிக்கும் ரேவதியின் மனசு

பாட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாமுண்டீஸ்வரி அவங்களுக்கு அந்த ஆசையெல்லாம் இல்ல என்று  சொல்ல, அதை நீ சொல்லாத என் பேரப்பிள்ளைகள் சொல்லட்டும் என்று சொல்கிறார். இதனால் உச்ச கட்ட கோவத்திற்கு செல்லும் சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை கொண்டு வந்து நீட்ட, பரமேஸ்வரி பாட்டி இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் சொல்கிறார். பின்னர் "இங்க பாரு, என் பேரனுக்கும் பேத்திக்கும் தான் கல்யாணம் நடக்கும்.. உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என சவால் விட்டு விட்டு  வெளியே செல்கிறார்.
 

66
பாட்டியை கோவிலில் சந்திக்கும் கார்த்தி

இதை தொடர்ந்து கார்த்திக் பரமேஸ்வரி பாட்டியை கோவிலில் சந்தித்து, எதுக்கு பாட்டி இப்படியெல்லாம் பேசுனீங்க என கேட்கிறான். அதற்க்கு ராஜராஜன் நான் தான் அம்மாவை அப்படி பேச சொன்னேன் என கூறுகிறார். இதற்கு கார்த்தி என்ன மாமா.. எல்லாமே தெரிஞ்சும் நீங்க இப்படி செய்யலாமா? என கேட்கிறார். பாட்டியின் சவாலால் ரேவதி ஒருபக்கம் பரிதவிக்கிறார். இப்படியான நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து கார்த்திகை தீபம் தொடரை பாருங்கள்.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு போன கஞ்சா கருப்பு ஆதங்கம்! என்ன நடந்தது?

Read more Photos on
click me!

Recommended Stories