தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது இசைஞானி இளையராஜா தான். அவரது இசை தான் மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. இளையராஜாவை தொடர்ந்து அவரது வாரிசுகளும் இசையுலகில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
கார்த்திக் ராஜா, பவதாரிணி ஆகியோரை விட இளையராஜாவின் கடைக்குட்டியான யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கோலோச்சி முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
24
yuvan shankar raja copied Ilaiyaraaja Song
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களில் சில பாடல்களை அவர் தன்னுடைய தந்தை இளையராஜாவின் இசையில் இருந்து காப்பியடித்து போட்டுள்ளதாக அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
அப்படி இளையராஜாவுக்கே தெரியாமல் அவரது மாஸ்டர் பீஸ் பாடல் ஒன்றை காப்பியடித்து அதை மெகா ஹிட் பாடலாக மாற்றி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது என்ன பாடல், எந்த படத்திற்காக அவர் காப்பிடித்தார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கோவா. இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி பாடல்கள் தான்.
அதிலும் குறிப்பாக யுவன் இசையில் ஆண்ட்ரியா பாடிய இதுவரை என்கிற பாடல் காதலர்களின் பிளேலிஸ்டில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்து உள்ளது. அந்தப் பாடலை இரண்டு வெர்ஷனாக கம்போஸ் செய்திருப்பார் யுவன் சங்கர் ராஜா. அந்த இரண்டு வெர்ஷனுமே வேறலெவல் ஹிட் அடித்தது.
44
Idhuvarai Song
இந்தப் பாடலை தான் இளையராஜா இசையமைத்த பாடலில் இருந்து காப்பியடித்துள்ளார் யுவன். இளையராஜா இசையில் உருவான மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று தென்றல் வந்து தீண்டும் போது பாடல். இப்பாடலை அவதாரம் படத்திற்காக கம்போஸ் செய்திருந்தார் இளையராஜா.
இப்பாடலை காப்பியடித்து தான் கோவா படத்தில் இடம்பெற்ற இதுவரை பாடலை கம்போஸ் செய்ததாக யுவன் சங்கர் ராஜாவே ஓப்பனாக கூறி உள்ளார். இந்த பாடலை தான் காப்பியடித்து போட்டது தன் அப்பா இளையராஜாவுக்கே தெரியாது எனவும் யுவன் தெரிவித்துள்ளார்.